1000 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு இந்த தேதி முதல் வழங்கப்படும்.! தமிழக அரசு அறிவிப்பு.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம், பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
கடந்தாண்டு வழங்கப்பட்டதை போலவே இந்த ஆண்டும், அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும், தலா 1000 ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி திராட்சை உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், அரசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்குவதற்கு 2363 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. 1000 ரூபையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்த நிலையில். தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,1000 ருபாய் பணம், பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் 29 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார்.

No comments:
Post a Comment
Please Comment