அன்ரிசர்வ் டிக்கெட், சீசன் டிக்கெட் புக் பண்றது ரொம்ப ஈஸி.. 'யுடிஎஸ் ஆப்' குறித்து தெற்கு ரயில்வே
சென்னை: முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை எங்கிருந்தும் புக்கிங் செய்வதற்காக யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை ரயில்வே கொண்டுவந்துள்ளது
இது தொடர்பாக விளம்பர வீடியோ ஒன்றையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயிலில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்க சென்னை சென்ரல், சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
அத்துடன் அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஓடுவோர் ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்று ஆக வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது.
இதேபோல் சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றாலும்,
அதற்கு டிக்கெட் எடுக்க காலை மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும்.
இதை பார்த்த ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது
இதன் மூலம் எங்கிருந்தபடியும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.
இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்கிறது.
இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள் என்று ரயில்வே விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பை டவுன்லோடு செய்தால் லாக் இன் ஐடியை உருவாக்கி உள்ளே நுழைந்து விரும்பும் இடத்திற்கு டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும்.
பணத்தை ரொக்கமாக எடுத்துக்கொண்டு போக தேவையில்லை. டிக்கெட் பிரிண்ட் அவுட்டும் தேவையில்லை. வரிசையில் நிற்கவும் தேவையில்லை.
உங்கள் ஸ்மார்ட்போனில் வீட்டில் இருந்த படியே டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இந்த ஆப்பால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
Unserve Ticket, Season Ticket Booking Very Easy .. Southern Railways Regarding 'UTS App'
Chennai: Southern Railway has released a promotional video on UTS (UTS) Mobile App Rail for booking unlimited tickets, platform tickets and season tickets from anywhere. In order to take the Unreserved Train ticket, there is a long line of major railway stations including Chennai Central and Chennai Egmore.
There is also a crisis where drivers have to stand in line to catch a train. Similarly, even though you have to travel by train on the suburbs of Chennai, you will get crowded during the early morning hours to get tickets for it.
Seeing this, the Railway Administration has introduced the UTS mobile app so that you can easily book unpaid tickets, platform tickets and season tickets anywhere. It's also very easy to use.
The app has been published in the Google Play Store for download and use. Downloading the app will generate the ID of the lock and you will be able to log in and book tickets to the desired location.
There is no need to carry cash in cash. No need to print out tickets. No need to stand in line. You can book tickets on your smartphone at home. Revenue from tickets booked by Apple has increased manifold.

No comments:
Post a Comment
Please Comment