மாணவர் கற்றல் திறனை மேம்படுத்த சிறப்பு கவனம்
''மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என மதுரை புதிய முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) கோபிதாஸ் தெரிவித்தார்.சி.இ.ஓ.,வாக இருந்த மாரிமுத்து திருவாரூருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் திண்டுக்கல் சி.இ.ஓ., கோபிதாஸ் நேற்று பொறுப்பேற்றார்.அவர் கூறியதாவது:மாவட்டத்தில் 1-8ம் வகுப்பு வரை மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் குறித்து ஆய்வு செய்து அதற்கேற்ப அவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும். நவீன தரத்தில் மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த கல்வித்துறை சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளது.
வரும் 9ம் தேதி இப்பயிற்சி மதுரையில் துவங்குகிறது, என்றார்.டி.இ.ஓ.,க்கள் அமுதா (மதுரை), யமுனா (மேலுார்), கஸ்துாரி (திருமங்கலம்), சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment