வரவேற்புன்னா அது இப்படி இருக்கோணும்.. பாருங்க.. முழுக்க முழுக்க விடியோ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரவேற்புன்னா அது இப்படி இருக்கோணும்.. பாருங்க.. முழுக்க முழுக்க விடியோ!

வரவேற்புன்னா அது இப்படி இருக்கோணும்.. பாருங்க.. முழுக்க முழுக்க விடியோ! 


இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு சென்னையின் வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. இந்த சந்திப்புக்காக சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இன்று சென்னை வருகை தந்துள்ளனர்.  வரவேற்புன்னா அது இப்படி இருக்கோணும்.. பாருங்க.. முழுக்க முழுக்க விடியோ! பிரதமர் மோடிக்கும், சென்னை வந்திருக்கும் சீன அதிபருக்கும் தமிழக அரசு சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இனி வரவேற்பு என்றாலே அது தமிழகத்தில் இரு தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டதே அதுதான் வரவேற்பு என்று சொல்லும் அளவுக்கு, சென்னை விமான நிலையத்திலேயே, பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன 




அதுமட்டுமா? பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இரு தலைவர்களின் சந்திப்பு, புகைப்படங்கள், விடியோ அனைத்தும் ஒரே இடத்தில் காண.. இங்கே கிளிக் செய்யவும் விமானத்தில் இருந்து இறங்கியதும், சென்னையா அல்லது சொர்கலோகமா என்று சீன அதிபரை திகைக்க வைத்துவிட்டது இந்த கலை நிகழ்ச்சிகள்.



ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளையும் நின்று நிதானமாக ரசித்துப் பார்த்த ஷி ஜின்பிங், இப்படி ஒரு வரவேற்பா என்று அசந்து போயிருப்பார். அவரை அதிசயிக்க வைக்க மாமல்லபுரத்தில் பல்லவ கால சிற்பங்களும் காத்திருக்கின்றன. மாமல்லபுரத்தில் இரு நாட்டின் கலை, கலாசார நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிரும் இரு நாட்டுத் தலைவா்களும், சனிக்கிழமை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சந்திப்பில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

No comments:

Post a Comment

Please Comment