ஒன்றாம் வகுப்பில் 'ஜீரோ' அட்மிஷன்: மாநிலத்தில், 1,513 பள்ளிகள் கவலைக்கிடம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஒன்றாம் வகுப்பில் 'ஜீரோ' அட்மிஷன்: மாநிலத்தில், 1,513 பள்ளிகள் கவலைக்கிடம்

ஒன்றாம் வகுப்பில் 'ஜீரோ' அட்மிஷன்: மாநிலத்தில், 1,513 பள்ளிகள் கவலைக்கிடம்நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இதுவரை, 1513 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.




அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பெற்றோரிடையே நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இதற்கு, பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லை உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.அரசு பள்ளிக்கு மிக அருகிலேயே, அதிக வசதியுடன் பல தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைய மிக முக்கிய காரணமாகி விடுகிறது. 


தமிழகத்தில், 1,848 அரசு பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.அதேபோல், 2019-20 கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள, 1,513 பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட புதிதாக சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதில், அரசு பள்ளி - 1,068, ஆதிதிராவிடர் நல பள்ளி - 72, மாநகராட்சி பள்ளி - 4, மாற்றித்திறனாளிகள் நலப்பள்ளி - 11, அரசு உதவிபெறும் மாற்றுத்திறனாளி பள்ளி - 5, அரசு உதவிபெறும் பள்ளி - 275, சீர்மரபினர் பள்ளி - 18, நகராட்சி பள்ளி - 27, பகுதி உதவி பெறும் பள்ளி - 7, மலைவாழ் மற்றும் பழங்குடியினர் பள்ளி - 26 என, அடங்கும்.இந்த பட்டியலில், சென்னையில் - 3; கோவையில் ஒரு மாநகராட்சி பள்ளியும் இணைந்துள்ளது.


கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே, 10க்கும் குறைவாக மாணவர்சேர்க்கை உள்ள பள்ளியில் இருந்து மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்கை ஆக., மாதம் வரை நடக்க உள்ளது. அதன் பின், பட்டியல் இறுதி செய்யப்பட்டு மாற்றுவழி கண்டறியப்படும்,' என்றார்.

No comments:

Post a Comment

Please Comment