UGC NET தேர்வு ஒத்திவைக்கப்பட்டது
தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக
வலைதளப் பதிவு
UGC NET தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றியக்
கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு
ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு! தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது
முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின்
தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது. -
இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின்
பன்முகத்தன்மையையும் இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து
முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்!
I had written to the Hon'ble Union
Education Minister requesting the rescheduling of the UGC NET exams. It is a
rightful decision that the exams have now been postponed! It has become a
recurring practice for the Union Government to announce major exams on Tamil
cultural festival days, only to reschedule them following state intervention.
Let us hope that, moving forward, every institution in this country respects its
rich diversity and considers the sentiments of all its people when making
decisions.
No comments:
Post a Comment
Please Comment