'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்.இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர்.
கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது .
A new scheme 'Looking for you in your town' will be implemented from tomorrow - Tamil Nadu Government Notification
Chennai,
In a press release issued by the Government of Tamil Nadu, Chief Minister M. K. Stalin on 23-11-2023 announced a new scheme 'Looking for you in your town' based on the noble intention of ensuring that all welfare programs and services of the government reach the people without any hindrance.
In a press release issued by the Government of Chennai, Tamil Nadu, Chief Minister M. K. Stalin on 23-11-2023 announced a new program called 'Looking for you in your home' based on the noble intention of ensuring that all government welfare programs and services reach the people quickly without any hindrance. According to this scheme, the District Collector and other high officials of the district level will stay in the selected circle from 9.00 am to 9.00 am the next day and carry out a field survey on the activities of the programs / services being implemented by various government departments.
Based on the feedback received during the field survey, the District Collectors will take appropriate measures for providing improved services / expediting the projects. Also on that day the District Collectors will meet the people directly, listen to their grievances and receive petitions and take appropriate action on them.
In order to get the government services easily and quickly, the general public should make good use of this camp. It has been reported.
No comments:
Post a Comment
Please Comment