30 விநாடிகளுக்குள் ஒரு பிட்சா!மணிக்கு 120 பிட்சாக்கள்!அசத்தும் சமைக்கும் ரோபோ இயந்திரம்!
பிட்சாவை பிரான்சில் உள்ள ஒரு உணவு விடுதியில் சமைப்பதே ரோபோதான். வழக்கமாக தொழிற்சாலைகளில் கடினமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் இப்போது பிட்சாவில் தக்காளி சாறு பூசி அதனை ஓவனில் சமைத்து அட்டைப்பெட்டியில் போட்டு பேக்கிங் செய்யும் வேலைகளையும் செய்கிறது.
நிஜமான பிட்சா மாஸ்டர்களே வியக்கும் வகையில் இதன் ருசியும் அபாரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒரு பிட்சா வீதம் இது சுட்டுத் தருகிறது. அதாவது மணிக்கு 120 பிட்சாக்கள்.
ஆனால் மனிதனால் மணிக்கு 40 பிட்சாக்களுக்கு மேல் சமைக்க முடியாது.இரண்டு பிரெஞ்ச் பொறியாளர்களின் திட்டம் இப்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment