பொறியியல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொறியியல்

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா ரவி, 2-ம் இடம் ரித்விக், 3-ம் இடம் ஸ்ரீவர்ஷினி !
சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இன்று காலை இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ.
படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.மேலும் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6ல் தொடங்குகிறது. 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.அதேபோல் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா ரவி, 2-ம் இடம் ரித்விக், 3-ம் இடம் ஸ்ரீவர்ஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment