உஷார்... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உஷார்...

மாணவர்களே உஷார் .! பள்ளிகளில் விதிக்கப்பட்ட புதிய தடை உத்தரவு .!
வரும் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கு நிலையில் அதற்கு முன்னோட்டமாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தடை உத்தரவு உடனடியாக அமலுக்குகொண்டு வரவேண்டும்.அதுமட்டுமின்றி மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள் தங்களுக்கு உட்பட்ட பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்பதை ஆய்வு செய்து விரைந்து உறுதி செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment