உங்கள் குழந்தை கோபத்தில் நிதானம் இழந்து கத்தும்போது அச்சூழ்நிலையைக் கையாள்வது எப்படி?
ஒவ்வொரு பெற்றோருக்குமே, குழந்தைகளின் உச்சகட்ட உணர்ச்சியோடு வெளிப்படும் விஷமங்கள் அல்லது அடம்பிடித்தல் ஒரு பெரும் தலைவலியை உண்டுபண்ணுவது சாதாரண விஷயமே. மார்க்கெட்டுகளில் கீழே கண்ட பொருட்களைத் தூக்கி எறிவதும், அளவுக்கு மீறி அழுவதும், தனக்குத் தானே தலையில் அடித்துக் கொள்வதும், போன்ற செயல்கள் எவருக்கும் தலைவலியைத் தரக்கூடியது. இது பெற்றோர்களுக்கு ஒரு பெரும் சுமையாகவும், சங்கடத்தையும், வெட்கத்தையும் தருவதாகவும் இருக்கிறது. இதையெல்லாம் அடக்குவதற்கு ஒன்று பெற்றோர்கள் உரக்கக் கத்தி அடக்க நினைக்கிறார்கள் அல்லது சமாதானப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டுமே சிறந்த வழிகள் அல்ல.
அவை மேலும் மேலும் குழந்தைகளின் இந்த அடம் பிடிக்கும் போக்கை அதிகப்படுத்தும்.
பிறகு என்னதான் செய்வது?
முதலில் குழந்தைகளின் இந்த விஷமப் போக்கைச் சற்று புரிந்து கொள்வோம்.
ஒரு குழந்தை ஏன் இவ்வாறு கோபப்பட்டு நிதானம் இழக்கிறது?
குழந்தைகளின் இந்தப் பிடிவாதப் போக்கு ஒருவித உணர்ச்சிப்பெருக்கின் வெளிப்பாடே ஆகும். உரக்க அழுவது - கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைத்த சாமான்களைத் தூக்கி எறிவது போன்றவை வெறித்தனமான செயல்களாகும்.
இந்த விஷமச் செயல்கள் சாப்பிடும்போது அல்லது படுக்கப் போகும்போது நடக்கும். அப்பொழுது குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுவதும் அல்லது விருந்தாளிகளைக் கவனிப்பதுமாக இருந்து விடுதல் நல்லது.
வெகு இளம் வயதுக் குழந்தைகளின் விஷமம் எப்படி இருக்கும் என்றால் தங்களுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, அல்லது சில செயல்களைத் தவிர்ப்பதாக, அல்லது பெரியவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக, அல்லது தங்களது சில விருப்பங்களைத் தவிர்த்துக் கொள்வதாக இருக்கும். அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் சிறு சிறு நிகழ்வுகள் அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போனால் கூட அவர்களது உணர்ச்சிகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
வேறுவிதமாகச் சொன்னால், கடந்த கால அனுபவங்கள் மூலம், அடம்பிடிப்பதே தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சரியான வழியாகும் என்று கற்றிருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வழியாகக் கண்டு கொண்டிருப்பார்கள்.
இந்தப் பழக்கம் தொடரத் தொடர மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே போகும். எவ்வளவுதான் பெற்றோர்களைச் சமாதானப் படுத்த முயற்சித்தாலும், நிலைமை மோசமாகிக் கொண்டு போவதை அவர்கள் விரும்புவதில்லை. அடம்பிடிப்பதை அவர்கள் விரும்பாமலேயே ஊக்குவிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆகவே என்ன செய்ய வேண்டும்? அதன் மூலம் நமது ஏமாற்றங்களையும், தலைக்குனிவையும் எப்படித் தவிர்த்துக் கொள்வது? அதை இப்பொழுது பார்ப்போம்.
அடம் பிடித்தலை எப்படி சமாளிப்பது?
இப்பொழுது என்னுடைய சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு டாக்டர். ஒரு 5 வயதுக் குழந்தை தீவிரமாக அடம் பிடிப்பதை கைக்கொண்டிருந்தான். அவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். கையில் கிடைத்ததைத் தூக்கி எறிவது, கத்துவது, கீழே விழுந்து புரண்டு அழுவது, எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது போன்றவை. அந்த சமயங்களில் அவனது தகப்பனார் அவனை அடிப்பதையும், திட்டுவதையும் கண்டேன். குழந்தையின் அம்மா, குழந்தையை சமாதனம் செய்யும் முயற்சியில் இறங்குவாள். அவனது தாத்தாவும் பாட்டியும் அவன் கேட்பதைக் கொடுத்துவிடுவார்கள்.
இப்பொழுது என்ன நடந்தது என்பதைக் கவனித்தீர்களா?
முதல் தவறு, அடம் பிடித்தல் என்ற செயல் நடந்தபொழுது குழந்தை மீது அக்கறை செலுத்தி கவனித்தது. இரண்டாவது, பெற்றோருக்கும், தாத்தா பாட்டியின் அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. மூன்றாவது இந்த நிலைமையைச் சீர்செய்ய எவ்விதமான சரியான அணுகுமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இந்த சூழ்நிலையில் எவ்விதமான முயற்சியும் குழந்தையின் அடம்பிடித்தலை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
நாம் எவருமே மேற்கண்ட எதையும் வேண்டுமென்றே செய்வதில்லை. சில எளிய வழிமுறைகளைக் கையாண்டாலே வெற்றி நிச்சயம் கிட்டும்.
முதலில் மன அமைதியைக் கையாளுங்கள்:
குழந்தையின் அடங்காப்பிடாரித்தனத்தைக் கையாள நினைக்கும் நீங்கள் முதலில் மன அமைதியுடன் அணுக வேண்டும். நீங்களும் கோபப்பட்டால் நிலைமை மிகவும் மோசமாகத்தான் போகிறது.
இத்துடன் குழந்தை இந்த சமயங்களில் பெற்றோர்களின் சுபாவத்தையே பின்பற்றி நடக்கும். மேலும் அடம்பிடிக்க ஆரம்பிப்பான். அதே வழியை எதிர்காலத்திலும் கையாளுவான்.
குழந்தை அடம் பிடிக்கும் உச்ச நிலையில் இருக்கும் போது, அவனுக்கு தேவைக்கு அதிகமான கவனம் கொடுப்பது எதிர்காலத்தில் அதே குணத்தை வெளிப்படுத்த மேலும் ஊக்கம் அளிக்கும். அதன் சாத்தியக்கூறு அதிகம் ஆகும். எவ்வளவுதான் தலைக்குனிவு ஏற்பட்டாலும், அடம்பிடித்தலுக்கு இடையே புகுந்து சமாதானப் படுத்த முயற்சிக்க வேண்டாம். விவரமாக எடுத்து உரைக்க ஆரம்பிக்க வேண்டாம்.
கொஞ்சம் நிலைமை சீராவதற்கு அமைதி காக்கவும். அடம் பிடித்தல் அடங்கிய பிறகு குழந்தை சற்று நேரம் அமைதிக்குத் திரும்ப அனுமதியுங்கள். அவர்கள் நிலைமையை மீண்டும் சீர்தூக்கிப் பார்க்க அனுமதியுங்கள். அதை எப்படித் தவிர்த்திருக்கலாம் என்பதை அவனுடன் அளவளாவுங்கள். குழந்தைகள் புரிந்து கொண்டு, நிலைமையைச் சீராக்கும் முயற்சியை நாடுவார்கள்.
குழந்தையின் கவனத்தை திருப்புங்கள்.
குழந்தையின் மனப்போக்கைச் சற்றே மாற்றுவதில் வெற்றி கிடைத்தவுடன், அவன் கவனத்தைத் திருப்புவதில் முனையலாம். இந்த மாற்றத்தை ஊன்றிக் கவனியுங்கள். குழந்தைக்கு இருக்கும் இதர ஈடுபாடுகளின் பக்கம் அவன் கவனத்தைத் திருப்பலாம்.
ஒரு சில சமயங்களில், குழந்தையின் கவனத்தைத் திருப்பினால், அதன் பிரதான வேண்டுதல் மறக்கப்படுவதோடு, வேறு திசையில் அதன் மனம் செல்கிறது.
பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள்: குழந்தையின் ஆர்பாட்டங்களைப் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். உதாரணத்திற்கு குழந்தைக்கு அடுப்படியில் இருந்து சிப்ஸ் எடுக்கும் வழி எளிதாக இருந்தால், பிற வழிகள் எளிதாகச் செயல்படும். ஒருவேளை குழந்தைக்கு விருப்பங்களைத் தெரிவிக்கும் வழியோ மொழியோ தெரியாவிட்டால், அது வேண்டும் பொருளைக் காண்பிக்கச் சொல்லுங்கள்.
உங்கள் பேச்சில் அறுபடாத தொடர்பு இருக்கட்டும். எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அந்த எல்லையை மீறக்கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். இது மிகவும் முக்கியம். இது போன்ற வரையறைகளை வகுத்தபின் பெற்றோர் அதில் மிகவும் உறுதியாக இருக்கவேண்டும்.
ஆகவே பெற்றோராகிய நாம், எப்பொழுதும் குழந்தையின் நடத்தையை நேர்வழியில் அச்சுறுத்தி நடத்தியும், பிரச்சினைகள் ஏற்படும்பொழுது அமைதி காத்தும், நமது விதிமுறைகள் மற்றும் வரையறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தும், முயன்று கொண்டே இருந்தால் நிச்சயம் குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தைக் காண முடியும்.
No comments:
Post a Comment
Please Comment