சத்துணவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சத்துணவு

சத்துணவு மைய முறைகேடுகளை தவிர்க்க மாணவர் விவரங்களை தினமும் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்
வேலூர், ஜூன் 29: வேலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரங்களை தினமும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். சத்துணவு திட்டத்தில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் சத்துணவு சாப்பிட்டாலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சாப்பிட்டதாக கணக்கு காட்டுவது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தது.
எனவே இந்த முறைகேட்டை தடுக்க பள்ளிகளில் தினமும் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்திலும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்போன் எண்கள் மூலம் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இருந்து சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்கள் தினமும் அனுப்பப்படவில்லை.
எனவே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகிறார்கள் என்ற விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் அனுப்பாத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment