வயலட் கலரில் புதிய 100 ரூபாய் நோட்டு: விரைவில் வெளியீடு.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வயலட் கலரில் புதிய 100 ரூபாய் நோட்டு: விரைவில் வெளியீடு..

வயலட் நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு வெளிய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த புதிய நோட்டை அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.








ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக கூறப்படு கிறது. இந்த புதிய நோட்டு ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

புதிய நோட்டு பார்ப்பதற்கு பழைய 100 ரூபாய் நோட்டை விட சிறியதாகவும், அதன் ஒருபுறத்தில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.




மேலும் இதே போன்று கள்ள நோட்டுக்கள் அச்சடிக்காத முடியாதபடி பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் அந்த நோட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நோட்டு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசோ, இந்திய ரிசர்வ் வங்கியோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment