1098 எண் உணவு பகிர அல்ல: விளக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

1098 எண் உணவு பகிர அல்ல: விளக்கம்

நாடு முழுவதும் குழந்தைகளின் உதவி, நலன், பாதுகாப்பிற்காக கட்டணமில்லா சைல்டுலைன் தொலைபேசி எண் 1098 வசதி உள்ளது. 







தற்போது 76 பெரியரயில்வே ஸ்டேஷன்கள் உட்பட 450 இடங்களில் செயல்படுகிறது. 2017 முதல் 2018 ஜூன் வரை 1.4 கோடி அழைப்புகள் இந்த எண்ணிற்கு சென்றுள்ளன. இந்நிலையில் விழாக்களில் மீதம் உள்ள உணவுகளை எடுத்து செல்ல இந்த எண்ணை பயன்படுத்தலாம் என தவறான தகவல் இணையதளத்தில் சிலர் பரப்பி வருகின்றனர். 




சைல்டுலைன் பிரதிநிதி தெரிவித்ததாவது: 





தவறான தகவல் பரப்புவர்களை கடுமையாக எச்சரிக்கிறோம். சைல்டுலைன் என்பது குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கானது தவிர உணவு பரிமாற்றத்திற்கானது அல்ல, என்றார்.

No comments:

Post a Comment

Please Comment