3200 ஜிபி டேட்டாவை அள்ளித்தரும் ஜியோ! இந்த ஆபரை பெறுவது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனத்துடன் கைகோர்த்து, 'ரிலையன்ஸ் ஜியோ ஓப்போ பருவமழைக்கால சலுகை'(Reliance Jio Oppo Monsoon Offer) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில், ரூ4,900 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 3200ஜிபி வரையிலான 4ஜி டேட்டாவை சலுகையாக தருகிறது ஜியோ. 'ரியல்மீ' தொடரை தவிர,அனைத்து புதிய ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் இந்த சலுகை பொருந்தும்.
ஜூன்28 முதல் துவங்கிய இந்த 'ரிலையன்ஸ் ஜியோ ஓப்போ பருவமழைக்கால சலுகை' திட்டம், செப்டம்பர் 25 வரை தொடரவுள்ளது. இந்த ஜியோ மற்றும் ஓப்போ ஆபர் மூலம், புதிதாக ஓப்போ ஸ்மார்ட்போன் வாங்கும் ஒருவர் ரூ4,900 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 3200ஜிபி வரையிலான 4ஜி டேட்டாவையும் சலுகையாக பெற முடியும்
இதைத் தவிர புதிய மற்றும் பழைய ஜியோ பயனர்களுக்கு பொருந்தும் வகையாக ரூ198 மற்றும் ரூ299 ப்ரீபெய்டு திட்டங்கள் உள்ளன.
ரூ198 திட்டத்தில், ஒரு நாளுக்கு 2ஜிபி என்ற வீதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 56ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பீரிமியம் ஜியோ செயலிகளை உபயோகப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
ரூ299 திட்டத்தில் ஒரு நாளுக்கு 3ஜிபி என்ற வீதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 84ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள்,, 100 குறுஞ்செய்திகள் மற்றும் பீரிமியம் ஜியோ செயலிகளை உபயோகப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
No comments:
Post a Comment
Please Comment