ஸ்மார்ட் கார்டுக்கு பதில் பயோ மெட்ரிக்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் தாக்கலின் போது முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.
குடிமைப்பொருள் வழங்கல் துறையில், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பணத்திற்கு பதில் அரிசியே வழங்க வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலமாக விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.ஸ்மார்ட் கார்டுகளில் பதிக்கப்பட்ட சிப்கள் வழக்கொழிந்து விட்டதால், ஆதார் அடிப்படையில் ( பயோ மெட்ரிக் ) பொது வினியோகத்தை மாற்றிட அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ரேஷன் கடைகளில், தங்களது அடையாளத்தை உறுதி செய்து பொருட்களை பெற இயலும்.நெசவாளர் பாதுகாப்புகைத்தறியை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1 கோடியில் புதுச்சேரி மற்றும் மாகி பகுதிகளில் 12 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 200 கால் மிதி தறிகளை நிறுவ உத்தேசித்துள்ளது.
விற்பனைக்கு ஆயத்தமான கைத்தறி தயாரிப்புகளுக்கு நெசவுக் கூலியில் 50 சதவீதமும், நூல் கொள்முதல் விலையில் 50 சதவீதம் வரையிலும் மானியம் வழங்கப்படும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் புதிய நிர்வாகக்குழு அமைக்கப்படும்.
No comments:
Post a Comment
Please Comment