ஒரு மாதத்தில் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலிபணியிடங்கள் முழுமையாக நிரப்படும். வாரத்திற்கு ஒரு முறை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்படும் என மாநிலக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட தமிழ்ப்பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் 4 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நேற்று தொடங்கியது. புத்தகத் திருவிழாவை மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment
Please Comment