தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இந்த பயிற்சி தொடங்கப்பட உள்ளதாகவும் கூறி உள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ். அகாடமி விரைவில் தொடங்கப் படும். தற்போது தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் உள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் நடமாடும் நூலகம் கொண்டு வரப்படும் என்றார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் நீட் தேர்விற்கான பயிற்சி தொடங்கப்படும் என்றும் 412 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும். கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டதால் போதிய மருத்துவ இடம் தமிழ்வழி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நீட் பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
கீழடி அகழ்வாராய்ச்சி பணி நிறைவடைந்த பிறகு, அங்கு கிடைக்கப்பட்டுள்ள பொருட்களை காட்சிபடுத்தி, அங்கு அரசு பள்ளி மாணவர்களை சுற்றுலாவாக அழைத்துச் சென்று காண்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment
Please Comment