மனோன்மனியம் பல்கலைகழகத்தில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மனோன்மனியம் பல்கலைகழகத்தில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல்

மனோன்மனியம் பல்கலைகழகத்தில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல்



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ் கலந்து கொண்டு பேசினார்.




மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018 - 19 ஆம் கல்வியாண்டில் முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த பட்ட படிப்பிற்கு சேர்க்கை பெற்று பயிலும் மாணவ மாணவியர்களுக்கான மூன்று நாட்கள் கொண்ட அறிமுக மற்றும் பயிற்சி வகுப்பு 09.07.2018 திங்கள்கிழமை முதல் தொடங்கி 11.07.2018 நிறைவு பெற்றது. இந்நிறைவு விழா நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகையில் விளையாட்டில் மட்டும்தான் வெற்றி தோல்வியை சரிசமமாக பார்ப்பார்கள் என்றும் தன்னைதானே ஊக்க்கப்படுத்தி கொள்வார்கள் என்றும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் மாணவ மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.அப்போது பிராட் ஹாக் பேசுகையில் நான் ஒரு கிராமத்தில் உள்ள ஏழ்மை குடும்பத்தில் பிறந்து பல்வேறு சோதனைகளைக் கடந்து சர்வதேச அளவில் விளையாடினேன்.




அது போல் நீங்களும் சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் தனக்கென ஒரு இலக்குடன் பயணம் செய்து வெற்றி பெற வேண்டும் என பேசினார். முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர் மற்றும் உடற்கல்வியியல் விளையாட்டுத்துறைத் தலைவர் சேது வரவேற்புரையாற்றினார். விழா முடிவில் கல்வியியல்துறைத் தலைவர் பேராசிரியர் வில்லியம் தர்ம ராஜா நிறைவுரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலர், தேர்வாணையர், தொலைதூர தொடர்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மேலும் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள், மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை செய்திருந்தது

No comments:

Post a Comment

Please Comment