பிரிட்டனில் வசிப்பவர் அப்சல்கான்; வாகன வடிவமைப்பாளரான இவர், சைடு பிஸினசாக, வாகன நம்பர் பிளேட் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது, இவரிடம் உள்ள, 'எப்1' என்ற நம்பர் பிளேட்டிற்கு, இவர் நிர்ணயித்துள்ள விலை, 136 கோடி ரூபாய். 60 கோடி ரூபாய் வரை கேட்டனர்; தர மறுத்து விட்டார். காரணம், 'எப்1' என்ற எழுத்துக்கு இருக்கும் மதிப்பு!
கடந்த, 2008ல், இந்த நம்பர் பிளேட், விற்பனைக்கு வந்தபோது, பலத்த போட்டிக்கு இடையே இதை வாங்கினார். முதன் முதலில், இந்த நம்பர் பிளேட், 1904ல் பதிவு செய்யப்பட்டதாம். இத்தகைய பெருமைகள் இதற்கு இருப்பதால், தான் கேட்ட விலை கிடைக்கும் என நம்புகிறார். இவரிடம், கவர்ந்திழுக்கும் நம்பர் பிளேட்கள் பல உள்ளன.
— ஜோல்னாபையன்.

No comments:
Post a Comment
Please Comment