ஐடிஏ - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐடிஏ


மாணவர்களுக்கும் டீ குடிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த திட்டம்




கொல்கத்தா :  நம் நாட்டில் ஒரு நபர் ஆண்டுக்கு பயன்படுத்தும் தேயிலையின் அளவு 786 கிராமாக உள்ளது என இந்திய தேநீர் சங்கம் (ஐடிஏ) தெரிவித்துள்ளது. இந்த அளவை அதிகரிக்க இந்த சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்கலைக் கழகம், கல்லூரி மாணவர்களிடம் தேநீர் பருகுவதை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது, இதை பள்ளிக் குழந்தைகளிடமும் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.




மேலும், இந்தியாவில் இருந்து டீ ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கவும், ஐடிஏ நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈராக் இந்தியாவில் இருந்து டீத்தூள் இறக்குமதி செய்யவில்லை. இலங்கை மற்றும் வியட்நாமில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது. அதனால் ஈராக்கில் இந்திய டீ தூளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை ஐடிஏ மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment