கூடுதல் கட்டண எஸ்எம்எஸ் விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கூடுதல் கட்டண எஸ்எம்எஸ் விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்





ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் எஸ்எம்எஸ். பிளாக்அவுட் நாட்கள் என்று அதிகபட்சமாக ஆண்டிற்கு 5 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தும். இதில் சிறப்பு, பண்டிகை நாட்கள் அடங்கும். இலவச அல்லது சலுகை எஸ்எம்எஸ்.கான திட்டத்தில் இருந்தாலும் அந்நாளில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்.சிற்கு கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் இதனை நுகர்வோர்களுக்கு முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும். மொபைல் சேவையில் ஏதாவது குறை இருப்பின் முதலில் டோல் பீரியான கன்ஸ்யூமர் கேர்நம்பருக்கு போன் செய்து உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும். போதிய இணைப்புகள் இந்த எண்ணிற்கு இருக்க வேண்டும் என்று டிராய் வலியுறுத்தி உள்ளது. 


புகாரைப் பதிவு செய்தவுடன் உங்களுக்கு டாக்கெட் எண்(DOCKET NUMBER) வழங்கப்படும். புகார் பதிவு செய்த நேரம், தேதி, புகாருக்கு தீர்வு வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றை எஸ்எம்எஸ்.மூலம் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தீர்வு வழங்கிய பின்னர் எஸ்எம்எஸ் மூலம் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டது என்பதை சேவை வழங்குவோர் தெரிவிக்க வேண்டும். இணைப்பில் குறை அல்லதுt சேவை துண்டிப்பு பற்றிய புகாருக்கு 3 நாட்களுக்குள்ளும், மற்ற புகார்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் தீர்வு வழங்க வேண்டும். பில் பற்றிய புகார்க்கு 4 வாரங்களுக்குள் தீர்வு கொடுக்க வேண்டும். 

அதுபோல் சேவை வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் விருப்பத்தை பதிவு செய்த 7 நாட்களுக்குள் சேவை வழங்குவோர் சேவையை துண்டிக்கt வேண்டும். அதன்பிறகு வாடகை மற்றும் இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. பாதுகாப்பு தொகை இருப்பின் அதனை பில்லில் சரிசெய்து மீதமுள்ள தொகையை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
கன்ஸ்யூமர் கேர் நம்பர் தவிர சேவை வழங்குவோர் மற்ற தகவல்கள் பற்றி வாடிக்கையாளர் அறிய பொது தகவல் நம்பர் ஒன்றையும் கொடுக்க வேண்டும். புகார் மையத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அபெலட் அதிகாரியிடம் (appellate authority) மேல்முறையீடு செய்யலாம்.

No comments:

Post a Comment

Please Comment