300க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்த்து, பாலேகுளி அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் பள்ளிக்கான விருது பெற்றுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், பாலேகுளி அரசு உயர்நிலைப்பள்ளியில், 186 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர் (பொ) வளர்மதி உட்பட, ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில், எலுமிச்சை, நொச்சி, வன்னி, வில்வம், ஆடாதொடா, நெல்லி, பேரிச்சை, தென்னை, வாழை, மிளகுச் செடிகள் போன்ற, பல்வேறு வகையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளை ஆசிரிய, ஆசிரியைகள் பராமரிக்கின்றனர். ஆசிரியர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில், பள்ளி வளாகத்தில் செடிகளை நடுவது சிறப்பாகும். அதுமட்டுமின்றி, 3,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை, மற்ற அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். கடந்த, 2016ல், 'சிறந்த பசுமைப் பள்ளி' விருதைப் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, இரண்டு லட்ச ரூபாயை பரிசாக வென்றது.
மேலும், பாலேகுளி, செலப்பசனம்பட்டி, கொட்டாவூர் ஆகிய கிராம மக்கள் சேர்ந்து, ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளனர். தற்போது பல்வேறு பணிகளுக்கு மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலையில், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் வளர்த்து, மாவட்டத்தில் உள்ள, மற்ற அரசுப் பள்ளிகளுக்கு, ஒரு எடுத்துக்காட்டாக, விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Please Comment