முதன்மையான தேர்வாக.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதன்மையான தேர்வாக..


மருத்துவக் கலந்தாய்வு மாணவர்களின் முதன்மையான தேர்வாக சென்னை மருத்துவக் கல்லூரி!


சென்னையில் இன்று தொடங்கிய பொதுப்பிரிவுக்கான மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். கலந்தாய்வின் தொடக்கமாக, தருமபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்த மாணவன் ராஜ் சந்தூர் அபிஷேக் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க, அடுத்தடுத்து கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஆச்சர்யப்படுத்தினர்.


பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கலந்தாய்வில் கலந்துகொண்ட முதல் 10 மாணவர்களுக்கு மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீட்டை வழங்கினார் அமைச்சர்.

No comments:

Post a Comment

Please Comment