பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் - மார்க் ஜக்கர்பெர்க் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் - மார்க் ஜக்கர்பெர்க்



பேஸ்புக் தளத்தை சுத்தம் செய்ய உள்ளதாக அதன் தலைமை நிர்வாகி மார்க் ஜக்கர் பெர்க் கூறியுள்ளார். பேஸ்புக் தளத்தில் உள்ள தவறான செய்திகள், தனி மனிதரை தாக்கி பகிரப்படும் தகவல்கள் ஆகியவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இணையத்தில் பேஸ்புக் தளத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக கூறும் ஜக்கர் பெர்க், தனி மனிதரை விமர்சித்து பதிவிடப்படும் பகிர்வுகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற மார்க் ஜக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கள் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்.


" சமூக வளைதளங்கள் வன்முறையை தூண்டும் விதமாக மாறி வருகிறது. மியான்மர், இந்தியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் பகிரப்படும் தகவல்களால் வன்முறைகள் வெடிக்கின்றன. பேஸ்புக் தளத்தில் பரப்பப்படும் புரளிகளால் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்" என்று ஜக்கர்பெர்க் கூறினார்.


இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்சப்களில் பகிரப்படும் தவறான தகவல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் மக்கள் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 2019ம் ஆண்டு நடக்க இருக்கிற நாடாளு மன்ற தேர்தலில் பேஸ்புக் தளத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜக்கர்பெர்க் கூறினார்.
வரும் காலங்களில் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி நடக்க இருக்கும் தவறுகளைthulir குறைக்கவும், அவற்றை தவிர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் ஜக்கர்பெர்க், இனி நடக்க இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பேஸ்புக் தளம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.


மேலும், உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சில நன்மைகளை அடைந்துள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீமை ஏற்படுவதை தவிர்ப்பது எங்களின் தலையாய கடைமை என்று ஜக்கர்பெர்க் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment