*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 27_*
*_11.07.2018_*
*_புதன்கிழமை_*
*_வரலாற்றில் இன்று_*
•┈┈•❀❀•┈┈•
*நிகழ்வுகள்*
•┈┈•❀❀•┈┈•
324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன்லிசீனியசை வென்றான். லிசீனியசுபைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார்.
987 – இயூ காப்பெட் பிரான்சின்மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
1608 – கியூபெக் நகரம்உருவாக்கப்பட்டது.
1754 – ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்:சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில்அமெரிக்க விடுதலைப் படைக்குத்தலைமை தாங்கினார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்:பென்சில்வேனியாவில் பிரித்தானியஇராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.
1778 – புருசியா ஆஸ்திரியாவின் மீது படையெடுத்தது.
1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடிபெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.
1848 – அமெரிக்கக் கன்னித் தீவுகளில் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
1849 – பிரான்சு உரோமைக் குடியரசு மீது படையெடுத்து திருத்தந்தை நாடுகளை மீள்வித்தது.
1867 – தமிழ்நாடு விழுப்புரம்வளவனூர் பகுதியில் நிலநடுக்கம்ஏற்பட்டது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்:கெட்டிசுபெர்க்கு சண்டையின் கடைசி நாள்.
1866 – புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
1872 – 1823 இல் ஆரம்பிக்கப்பட்டபட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில்வட்டுக்கோட்டையில்ஆரம்பிக்கப்பட்டது.
1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாகஇணைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்:செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில்பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்:பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க்சோவியத் செஞ்சேனைப்படையினரால் நாட்சி ஜெர்மனியிடம்இருந்து விடுவிக்கப்பட்டது.
1969 – விண்வெளிப் போட்டி:சோவியத் ஒன்றியத்தின் என்1 என்றஏவூர்தி ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
1970 – பிரித்தானிய விமானம்ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – அமெரிக்க போர்க் கப்பல்வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
2006 – பூமியில் இருந்து 432,308 கிமீதூரத்தில் 2004 எக்சு.பி14 என்றசிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.
2013 – எகிப்திய அரசுத்தலைவர்முகம்மது முர்சி இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
•┈┈•❀❀•┈┈•
*பிறப்புகள்*
•┈┈•❀❀•┈┈•
1782 – பியெரி பெர்தியர், பிரெஞ்சு புவியியலாளர் (இ. 1861)
1883 – பிரான்ஸ் காஃப்கா, செக்-ஆத்திரிய எழுத்தாளர் (இ. 1924)
1918 – எஸ். வி. ரங்கராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ.1974)
1923 – டி. ஆர். பாப்பா, தமிழக திரைப்பட இசையமைப்பாளர், வயலின் இசைக் கலைஞர் (இ. 2004)
1924 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 2016)
1928 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப் பாடகர் (இ. 1990)
1942 – அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட இயக்குநர்
1948 – கோ. இளவழகன், தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர்
1949 – நெ. அப்துல் அஜீஸ், இந்திய அரசியல்வாதி
1952 – வசீம் ராஜா, பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2006)
1962 – டாம் குரூஸ், அமெரிக்க நடிகர்
1971 – ஜூலியன் அசாஞ்சு,விக்கிலீக்ஸ் நிறுவனர்
1980 – ஹர்பஜன் சிங், இந்தியத் துடுப்பாளர்
1982 – கனிகா இந்திய நடிகை, பாடகி
1986 – கிரத்திக்கா தீர், இந்தியத் தொலைக்காட்சி நடிகை
1987 – செபாஸ்டியன் வெட்டல், செருமானிய மோட்டார் பந்தய வீரர்
•┈┈•❀❀•┈┈•
*இறப்புகள்*
•┈┈•❀❀•┈┈•
1971 – ஜிம் மோரிசன், அமெரிக்கப் பாடகர் (பி. 1943)
1996 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (பி. 1926)
•┈┈•❀❀•┈┈•
*சிறப்பு நாள்*
•┈┈•❀❀•┈┈•
விடுதலை நாள் (பெலருஸ், 1944)
பெண்கள் நாள் (மியான்மர்)
•┈┈•❀❀•┈┈•
No comments:
Post a Comment
Please Comment