ஆன்லைன் மோசடி பேர்வழிகளின் போலி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு, வருமானவரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இனறைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வருமானவரித்துறையின் பெயரை பயன்படுத்தி, ஆன்லைன் மோசடி பேர்வழிகள், பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதையடுத்து, வருமானவரி செலுத்துநர்களுக்கு, எச்சரிக்கை கலந்த பல்வேறு வழிகாட்டுதல்களை, வருமானவரித்துறை வழங்கியிருக்கிறது.
இதன்படி, வருமானவரித்துறையின் பெயரில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கான சின்னஞ்சிறு மாற்றங்களுடன் வரும் போலி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, வருமானவரித்துறையிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் donotreply@incometaxindiaefiling.gov.in என்ற மெயில் ஐ.டி மூலம் அனுப்பப்படும் என்றும், இந்த அதிகாரபூர்வ மெயில் ஐடியில், incometaxindiaefiling என்பதில், 'E'-ஐ மட்டும் விட்டுவிட்டு, incometaxindiafiling என்ற பெயரில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவில், ஆன்லைன் மோசடி பேர்வழிகளிடம் இருந்து போலி மின்னஞ்சல்கள் வந்துசேரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
வரி பிடித்தம் போக மீதமுள்ள தொகையை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க, உங்களது, இணையவழி வங்கி கணக்கு விவரங்களை தாருங்கள் எனthulir மின்னஞ்சல் வந்தால், அது மோசடி பேர்வழிகளால் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல் என கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருபோதும் வருமானவரி செலுத்துநர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை கோருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுதவிர, நீங்கள் தாக்கல் செய்த வருமானவரி கணக்கில் பல்வேறு விவரங்கள் தவறாக இருக்கிறது என வரும் இ-மெயில்களும் போலியானவை எனக் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு, வரும் இ-மெயில்களை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காரணம், அந்த போலி மின்னஞ்சலில், ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், அதை அழுத்தினால், நமது நெட்பேங்கிங் பக்கத்திற்கு சென்றுவிடும் என்றும், எதனையும் கவனிக்காமல், நெட்பேங்கிங்-ஐ திறந்தால், அடுத்த சில வினாடிகளில், உங்களது வங்கி கணக்கை முடக்கும் ஹேக்கர்கள், அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் பேராபத்து இருப்பதாகவும், வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment