விண்ணப்பித்துவிட்டீர்களா...? ஆன்லைனில் விரைந்து விண்ணப்பித்துவிடுங்கள்.. இன்றே கடைசி..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விண்ணப்பித்துவிட்டீர்களா...? ஆன்லைனில் விரைந்து விண்ணப்பித்துவிடுங்கள்.. இன்றே கடைசி..!

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 275 'Senior Factory Assistant' பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசியாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 275

பணி: Senior Factory Assistant


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் 152 இடங்களும், திருவண்ணாமலைக்கு 35 இடங்களும், நீலகிரிக்கு 35 இடங்களும், ஈரோட்டிற்கு 9 இடங்களும், சேலத்தில் 11 இடங்களும், தஞ்சாவூரில் 33 இடங்களும் உள்ளன.


வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழை ஒரு படமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது ஐடிஐ மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.omcaavinsfarecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் 

அறிய http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Please Comment