விங்ஸ்' -புதிய இணைய தொலைபேசி வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விங்ஸ்' -புதிய இணைய தொலைபேசி வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்

விங்ஸ்' என்னும் அதிநவீன என்.ஜி.என். (அடுத்த தலைமுறை நெட்ஒர்க்) இணைய தொலைபேசி வசதியை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து, பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் ஆர்.மார்ஷல் ஆண்டனி லியோ செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:


விங்ஸ்' என்னும் அதிநவீன அடுத்த தலைமுறை நெட்ஒர்க் (என்.ஜி.என்) மூலமான இணைய தொலைபேசி வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.


இணைய இணைப்பு மூலம் செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்ற கருவிகளில் இருந்து குரல் அழைப்பு விடுக்கும் வசதியை அளிக்கிறது. விங்ஸ்' ஃபிக்ஸ்ட் மொபைல் டெலிபோன் என்பது செல்லிடப்பேசி செயலி மூலமாக குரல் அழைப்பு விடுக்கும் வசதியை அளிக்கவல்லது. இதன் மூலம்thulirவாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் கட்டமைப்பிலும், பிற தொலைத்தொடர்பு நிறுவன கட்டமைப்புகளிலும் வரும் அழைப்புகளை மடிக்கணினி, எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க பேசியில் இருந்து விடுக்கவும், ஏற்கவும் முடியும். லேண்ட் லைன், செல்லிடப்பேசி அல்லது பிஎஸ்என்எல் விங்ஸ் எண் இவற்றில் எந்த எண்ணுக்கும் அழைப்பு விடுக்க முடியும். பாக்கெட் ஸ்விட்சஸ்' என்னும் தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் இருந்து சிம்கார்டு இன்றி செல்லிடப்பேசி மூலமும் அழைப்பு விடுக்க இயலும். 


கட்டணம் ரூ.1,099: பி.எஸ்.என்.எல் விங்ஸ்' சேவைக்கு ஜூலை 25 -ஆம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம். கணினி, மடிக்கணினி அல்லது செல்லிடப்பேசி என எந்த சாதனத்திற்கும் 'விங்ஸ் வசதியை பதிவு செய்து கொள்ளலாம். அறிமுகச் சலுகையாக ஒரு ஆண்டு கட்டணத்துடன் இந்தியாவில் அனைத்து நெட்வொர்க்கிலும் ஆண்டு முழுவதும் இலவசமாக பேசும் வசதியை விங்ஸ்' அளிக்கிறது. ஓர் ஆண்டுக்கான கட்டணம் ரூ.1,099.


 அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தலாம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment