வீடுதோறும் இனி இணையம்..!! அரசின் புதிய சேவை திட்டம் ..! அனைத்து கிராமங்களையும் இணைக்க திட்டம்..!!!
அனைத்து கிராமங்களையும் இணையம் வழியாக இணைக்கும் "பாரத் நெட்" திட்டத்தை செயல்படுத்த, "தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன்" என்ற நிறுவனத்தை உருவாக்கி, தமிழக அரசு பதிவு செய்துள்ளது.
இந்திய முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை ஒன்று இணைத்து, அரசின் சேவைகளை இணையம் வழியாக பொதுமக்கள் பெற, "பாரத் நெட்" என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளும், ஆப்டிக்கல் பைபரால் இணைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த, ரூ.1,230 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில்,, "தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன்" என்ற, தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் ஒருவர் கூறியதாவது: விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment