அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம்

அங்கன்வாடி சேவைகள் தொடர்பாக,அங்கன்வாடி ஊழியர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.அங்கன்வாடிகளில் செயல்படுத்தும், ஒருங்கிணைந்த சத்துணவு திட்டம் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டம் மற்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பணிகளை செம்மைப்படுத்ததுல் தொடர்பாக, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு,5 நாள் பயிற்சி முகாம், குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மூலம்,கோரிமேடு, மதர் தெரேசா செவிலியர் கல்லுாரியில் நேற்று துவங்கியது.பயிற்சி முகாமை, துறை செயலர் ஆலீவ் வாஸ் துவக்கி வைத்தார். கல்லுாரி இயக்குநர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.

 துறை இயக்குநர் யஷ்வந்தையா, திட்ட அதிகாரி விஜயலட்சுமி, குழந்தைகள் திட்ட அதிகாரி ஆர்.விஜயா, வி. விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெங்களூரில் உள்ள தேசிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூட்டுறவு பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி முகாமில் 40 அங்கன்வாடி ஊழியர்களும், 10 துணை செவிலியர்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment