மாரத்தான் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாரத்தான்



விளையாட்டு மாரத்தான் போட்டியில் தமிழக மாணவி உலக சாதனை


தமிழகத்தை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி மாரத்தான் ஓட்டத்தில் 18 கிமீ தூரத்தை ஒரு மணி, 59 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார்.


அமெரிக்காவின் கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனத்தின்  இந்திய பிரதிநிதி ராக்கேஷ்வேல் முன்னிலையில் திருமங்கலத்தை அடுத்த  உச்சப்பட்டி துணைக்கோள் நகரத்தில் 18 கிமீ தூரத்திற்கான தனிநபர்  மராத்தான் போட்டி நேற்று நடந்தது. 


காலை 6 மணிக்கு திருமங்கலம் டிஎஸ்பி  ராமகிருஷ்ணன் போட்டியை துவக்கி வைக்க பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர்.
இதில் திருமங்கலத்தை சேர்ந்த முனிராஜ் மகள் ஹரணிஸ்ரீ (9 வயது, நான்காம் வகுப்பு மாணவி),18 கிமீ தூரத்தை ஒரு மணிநேரம் 59 நிமிடங்களில் இடைநில்லாமல் ஓடி புதிய உலக சாதனை  படைத்தார். இதன்மூலம் அவர், கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்  புத்தகத்தில் இடம் பிடித்தார்.



 9 வயதுக்குட்பட்டோருக்கான மராத்தான் போட்டியில் இதுவரை 6  கிமீ தூரம் ஓடியது தான் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment