முதன்முறையாகச் செல்பேசிச் செயலி மூலம் தொலைபேசி எண்ணுக்கே பேசும் வசதியை BSNL அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் முதன்முறையாக இணையவழித் தொலைபேசிச் சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது. இதன் மூலம் BSNL வாடிக்கையாளர்கள் (Wings)விங்ஸ் என்கிற செல்பேசிச் செயலியைத் தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு, அதிலிருந்து இந்தியாவின் எந்தவொரு செல்பேசி மற்றும் தொலைபேசி எண்ணுக்கு இணையம் வழியாகப் பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக குறிப்பிட்ட செல்பேசிச் செயலிகள் மூலம் அதே செயலியை வைத்துள்ள பயனாளர்கள் மட்டும் இணையவழித் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் செல்பேசிச் செயலி மூலம் தொலைபேசி எண்ணுக்கே பேசும் வசதியை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவைக்கான பதிவு இந்த வாரம் தொடங்குகிறது என்றும் பதிவு செய்தவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இணையவழித் தொலைபேசிச் சேவை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Please Comment