Bus pass - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Bus pass

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை? அமைச்சர் என்.மகேஷ் விளக்கம்
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹாசனில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து முதல்வர் குமாரசாமியுடன் ஆலோசித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
இந்தத் திட்டம் குறித்து நிதித் துறையிடம் முதல்வர் குமாரசாமி கருத்து கேட்டுள்ளார். வெகுவிரைவில் முதல்வர் குமாரசாமி முடிவை அறிவிப்பார். உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதில் எவ்வித குழப்பமும் இல்லை.

No comments:

Post a Comment

Please Comment