கல்வித்தகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டு அரசுப்பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : தமிழக அரசு முடிவு
கணினி ஆசிரியர் கல்வித்தகுதியில் மாற்றங்களை மேற்கொண்ட பின்னர் விரைவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் அப்பாடங்களை கற்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் 748 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலா ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால் தற்போது கணினி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment