Group 4 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Group 4

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கலந்தாய்வும் அறிவிப்பு..!!


தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சாாபில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 ஆகிய இடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.


இதையடுத்து 5 மாதங்கள் கழித்து தேர்வு முடிவுகள் நேற்று திங்கள்கிழமை மாலை டிஎன்பிஎஸ்சி இணைதளத்தில் வெளியிடப்பட்டன.
குரூப் 4 தேர்வை மொத்தம் 17 லட்சம் பேர் எழுதினர்.
இதில், சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.


தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும், தேர்வானவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கலாம்.
சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கி 30 ஆம் தேதி வரை இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும்.

மேலும் இதற்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Please Comment