ஐ.ஐ.டி., ஆன்லைன் படிப்பு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம்
ஐ.ஐ.டி.,க்கள் நடத்தும் ஆன்லைன் படிப்பை, பேராசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கு அங்கீகரிப்பதாக, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது
சென்னை, மும்பை, கான்பூர், டில்லி, கரக்பூர், கவுஹாத்தி உட்பட, ஏழு, ஐ.ஐ.டி.,க்கள், ஆன்லைனில், பல்வேறு சான்றிதழ் படிப்புகளை நடத்துகின்றன. இந்த படிப்புகள், மத்திய மனித வள அமைச்சகத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகின்றன
ஆன்லைன் படிப்புக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தும் வகையில், சென்னை, ஐ.ஐ.டி.,யும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யும் ஒப்பந்தம் செய்துள்ளன
இதன்படி, ஐ.ஐ.டி., யின் ஆன்லைன் படிப்புகளில் சேரும், இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அந்த படிப்புகள், பேராசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கு அங்கீகரிக்கப்படும் என, ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசகர் திலீப் மல்கேடே அறிவித்துள்ளார்

No comments:
Post a Comment
Please Comment