Moon - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Moon

சந்திரனை தொட்டது யார்... வென்று காட்டிய விஞ்ஞானிகள்


நிலவைக் காண்பித்து 'குழந்தைக்கு உணவு ஊட்டிய காலம் போய், அந்த நிலவுக்கே சென்று குடியேறுமளவுக்கு இன்று விண்வெளி ஆய்வு வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு அடித்தளமிட்டவர் நீல் ஆம்ஸ்டிராங். இவர் தான் நிலவின் மீது முதன்முதலில் காலடி எடுத்து வைத்தவர். இச்சாதனை நடந்து 49 ஆண்டுகள் ஆகி விட்டன.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இந்த விண்கலம் ஜூலை 20ம் தேதி (இந்திய நேரம் நள்ளிரவு 12:48 மணிக்கு) நிலவில் இறங்கியது.


6 மணி நேரம் கழித்து, நீல் ஆம்ஸ்டிராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார். பின் 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். விண்வெளியில் வீரர்கள் தங்களின் உணவுக்கு சுகர் குக்கீஸ், பைன் ஆப்பிள், திராட்சை ஜூஸ், காபி எடுத்துக்கொண்டனர்.


நீயா... நானா... கடந்த 1957 அக்., 4ல் 'ஸ்புட்னிக் 1' என்ற உலகின் முதல் செயற்கைக்கோளை, சோவியத் யூனியன் விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இதன்பின் 1961ல் அமெரிக்கா தனது முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
பின் இருநாடுகளுக்கும் இடையே நிலவிய பனிப்போரின் விளைவாக, போட்டிபோட்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பின. இதன் ஒரு கட்டமாக 1969ல் அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பி, சாதனை படைத்தது. யார் அந்த மூன்று பேர் * நீல் ஆம்ஸ்டிராங் 1930, ஆக. 5ல் பிறந்தார்.

பி.எஸ்., (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்), எம்.எஸ்., (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர். 2012 ஆக., 5ல் மறைந்தார்.* எட்வின் ஆல்ட்ரின் 1930, ஜன. 20ல் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி.
நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்ற பெருமை பெற்றவர்.* மைக்கேல் கோலின்ஸ் 1930, அக்., 31ல் இத்தாலியில் பிறந்தார். பி.எஸ்., பட்டதாரி. 'அப்பலோ 11' பயணத்துக்கு பின் அமெரிக்காவின் 'நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசிய நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.3.8பூமியில் இருந்து 3.84 லட்சம் துாரம் கடந்து, 76 மணி நேரத்தில் நிலவை விஞ்ஞானிகள் அடைந்தனர். 8எட்டு நாட்களுக்கு பின், ஜூலை 24ல், கொலம்பியாவில் வெற்றிகரமாக விண்கலம் தரை இறங்கியது.6அப்பல்லோ - 11 விண்கலத்தை தயாரிப்பதற்கு, 6 ஆண்டுகள் ஆனது.
இதற்கான செலவு ரூ. 1.74 லட்சம் கோடி.

No comments:

Post a Comment

Please Comment