18. 07.2018
*பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*
*திருக்குறள்*
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
சிறுகை அளாவிய கூழ்.
விளக்கம்:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
*பழமொழி*
Empty vessels make the greatest sound.
குறை குடம் கூத்தாடும்.
*பொன்மொழி:*
ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம் ,உழைப்பு ஆகிய மூன்றும் தேவை.
--அண்ணல் அம்பேத்கர்
*இரண்டொழுக்கப் பண்பாடு*
1.நான் யாரிடமும் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டேன்.
2.பிற உயிரினங்களை துன்புறுத்தாமல் பாதுகாப்பேன்.
*பொதுஅறிவு*
1.இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது ?
ஆரியபட்டா
2.அம்மை நோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
எட்வர்ட்ஜென்னர்
*நீதிக்கதை*
இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.........
வழக்கொன்றை சந்தித்தது.........
வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு
திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.
திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.
வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........
"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.
இதை கேட்டதும் நீதிபதி.........
"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.
எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."
எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."
இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......
"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்
ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.
ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.
காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.
இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!
சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோா்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !
நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.
முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.
முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.
ஆதாரம்: Spirit news- indonesia
#ஆதரிப்போம்_எளியவர்களை_தேடி_தேடி
*இன்றைய செய்திகள்*
18.07.2018
18.07.2018
* மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்கிழமை இரவு நிலவரப்படி 100 அடியாக உயர்ந்தது.
* தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் அனைத்து மாவட்டத்திலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.
* தில்லியில் 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது.
* கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெற்ற தெற்காசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இந்திய அணி 177 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
* விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றதின் எதிரொலியாக நோவக் ஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் மீண்டும் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
*Today's headline*
Tamil Nadu Chief Minister on Monday announced that the sluice gates of the Mettur dam will be opened on July 19 in view of the huge in flow of water from Karnataka Reservoir over the past few days
Chief Minister inaugurated the podanur rail over bridge on Monday
in 10 m years, Africa splits new peak, Rival ,Himalayas slowly shifting tectonic plates ,upon which our continents which can change the face of the planet earlier this year track opened up in the ground in Kenyan part of the east African rift Valley through the track was and related to tectonic plate movement research has shown in 10 million years Africa could drastically change giving rise to new continents and mountain ranges.
No comments:
Post a Comment
Please Comment