புதிய கல்விக்கொள்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!
புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இது 1992-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. இதையடுத்து புதிய கல்விக்கொள்கையை உருவாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.ஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசின் மனிதவளத்துறையிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மூலம் கல்வியாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
6
No comments:
Post a Comment
Please Comment