அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி : தமிழக அரசு அறிவிப்பு'
அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி பிடித்தம்r செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை பிடித்தம் செய்யப்பட்ட வைப்பு நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை, அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment