Special teachers - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Special teachers

சிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரி மனு



சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளோம்
தேர்வு நடைபெற்று 9 மாதங்களாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 14 -ஆம் தேதி தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது





மேலும், நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து ஓ.எம்.ஆர். நகலையும் ஆசிரியர் தேர்வு வாரிய வளாக கணினி திரையில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்தது
சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 15 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான  பட்டியலையும் விரைவாக வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment