யுபிஎஸ்சி தேர்வு எதிரொலி வனப் பயிற்சியாளர் தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை கடந்த 4ம் தேதி அறிவித்தது
அதற்கான தேர்வுகள் செப்டம்பர் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தது
இந்நிலையில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 28ம் தேதி முதல் ஐந்து நாட்கள் குடிமைப்பணிகளுக்கான முதன்மைத்தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது
இந்நிலையில் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வினை, அக்டோபர் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது
இதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Please Comment