தமிழகத்தில் இன்று(ஆக.,17) பொது விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் இன்று(ஆக.,17) பொது விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு, இன்று(ஆக.,17) பொது விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று இறந்தார். அவரது மறைவையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நேற்று முதல், 22ம் தேதி வரை, மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்டும். மாநிலம் முழுவதும், தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும்நடைபெறாது என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

7 நாட்கள் துக்கம் :
வாஜ்பாய் மறைவையொட்டி நாடு முழுவதும் 22ம் தேதி வரை 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


அரை நாள் விடுப்பு:
அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும், அரசு பொதுத்துறை நிறுவனங்களும், டில்லியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் இன்று(ஆக., 17) அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment