1-ம் தேதி முதல் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்கள் விருப்பப்படி காப்பீடு செய்ய ரயில்வே முடிவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

1-ம் தேதி முதல் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்கள் விருப்பப்படி காப்பீடு செய்ய ரயில்வே முடிவு

செப்டம்பர் 1-ம் தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்ய உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC)என்ற இணையதள முகவரி மூலம் பயணிகள் தங்கள் இ-டிக்கெட்டுகளை பதிவு செய்கின்றனர். இந்த இ-டிக்கெட்டுகள் பதிவு செய்யும்போது பயணிகள் விருப்பத்தை பொறுத்தே ரயில்வே நிர்வாகம் (இன்சூரன்ஸ்) காப்பீடு செய்கிறது.

இதற்காக ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. மேலும் ரயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி டிக்கெட் பதிவு செய்யும் போது இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டிக்கெட் முன்பதிவு செய்யும்போது காப்பீடு செய்த பயணிகள் விபத்து ஏற்பட்டபோது உயிழந்தால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment