நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சுமார் 24 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில்களில் இது குறித்த புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை அளிக்கப்பட்ட பதிலில் ஆரம்ப பள்ளிகளில் 9 லட்சம், இடைநிலை பள்ளிகளில் 1.1. லட்சம் என மொத்தம் 10.1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
காவல் துறையில் 5.4 லட்சம், ரெயில்வேயில் 2.4 லட்சம், அங்கன்வாடி பணியாளர்கள் 2.2 லட்சம், சுகாதார மையங்கள் 1.5 லட்சம், ராணுவம் 62,084, துணை ராணுவம் 61,509, எய்ம்ஸ் 21,740, இதர உயர் கல்வி நிறுவனங்கள் 12,020, நீதிமன்றம் 5,853 என மொத்தம் 23.8 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment