லையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை, 3 மாதத்திற்கு 100 ஜிபி இலவசம், புக் செய்வது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

லையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை, 3 மாதத்திற்கு 100 ஜிபி இலவசம், புக் செய்வது எப்படி?

லையன்ஸ் ஜியோ நிறுவனம் எப்படி மொபைல் டெலிகாம் சேவையினை அறிமுகம் செய்யும் போது தொலைத்தொடர்பு சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதோ அதே போன்று ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் செய்ய உள்ளது. 


ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை எப்போது வணிக ரீதியாகப் பயன்பாட்டிற்கும் வரும் என்று தெரியவில்லை என்றாலும் முதல் 90 நாட்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 100 ஜிபி தரவினை இலவசமாக அளிக்க உள்ளதாகத் தகவல்கள்ல் கூறுகின்றன. டெபாசிட் ரிலையன்ஸ் ஜியோவின் இந்தப் பிராட்பேண்ட் சேவையினைப் பெற 4,500 ரூபாயினைச் செக்யூரிட்டி டெபாசிட் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



 இதன் கீழ் ஜியோ பிராட்பேண்ட் மோடம் மற்றும் ஆப்டிக்கல் கேபிள் லைன் போன்றவை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அலுவலகம் & வீடு ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது விரைவில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு இணையதளச் சேவை வழங்கும் என்று ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்து இருந்தார். தீபாவளி ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை நாடு முழுவதிலும் 1000 நகரங்களில் கிடைக்கும் என்றும் தீபாவளி முதல் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வரும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 




ஜியோ ஜிகாஃபைபர் ரிலையன் ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் கீழ் ஜிகாபிட் வைஃபை, டிவி, ஸ்மார்ட் ஹோம், இலவச அழைப்புகளுடன் மேலும் பல சேவைகளை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தல் ஜியோ ஜிகாஃபைபர் சேவையினை ரிலையன்ஸ் ஜியோ இணையதளம் (gigafiber.jio.com) மூலம் புக் செய்யலாம். ஒரு நகரத்தின் எந்தப் பகுதியில் இருந்து அதிகளவில் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கும் முதலில் சேவைக்கான இணைப்பு கிடைக்கும்.

No comments:

Post a Comment

Please Comment