கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகத்தில் கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல கல்லூரி இணை இயக்குநர்களுக்கு, கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆர்.சாருமதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாணவர்-மாணவி என இருபாலரும் பயிலும் கல்லூரிகளில், மாணவிகளை மாணவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக புகார்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு நேரங்களில் செல்போனை பயன்படுத்தி மாணவர்கள் முறைகேடு செய்வதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment