சி ஏ - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சி ஏ

சி.ஏ., தேர்வில் கோவை மாணவர்கள் மூன்று பேருக்கு அகில இந்திய ரேங்க்!



சி.ஏ., பணிக்கானதேர்வில், கோவையை சேர்ந்த, மூன்று மாணவர்கள் அகில இந்திய அளவில் ரேங்க் எடுத்துள்ளனர்.tஇந்திய பட்டய கணக்கு நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.,), ஆடிட்டர் பணிக்கான, மூன்று நிலை தேர்வுகளை, ஆண்டுதோறும் இருமுறைநடத்தி வருகிறது.




 இதில் வெற்றி பெறுவோர், ஆடிட்டர் ஆகலாம். கடந்த மே மாதம் நடந்த இத்தேர்வுகளுக்கான முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், கோவையை சேர்ந்த மூன்று மாணவர்கள், அகில இந்திய அளவில் ரேங்க் எடுத்து, சாதனை படைத்துள்ளனர்.சி.ஏ., (ஐ.பி.சி.சி.,) தேர்வில், ராம்நகரை சேர்ந்த மாணவர்t லஷ்மணன், அகில இந்திய அளவில், இரண்டாமிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.700க்கு, 502 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர், பொறியியல் பட்டதாரி.




இவர், முன்னணி கார்ப்பரேட் நிறுவன பணியை துறந்து, tஇத்தேர்வுக்கு தயாரானது குறிப்பிடத்தக்கது.இதேபோல், சி.ஏ., பவுண்டேஷன் எனப்படும் முதல்நிலை தேர்வில், வேடப்பட்டியை சேர்ந்த மாணவர் விக்னேஷ், 400க்கு, 288 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 21வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment