நிலவில் உறைந்த ஐஸ் படிமம்: சந்திரயான் தகவலை உறுதி செய்த நாசா
நிலவில் ஐஸ் படிமம் இருப்பதாக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கல தகவல் உண்மை தான் என நாசா ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாவது, ''சந்திரனில் இருண்ட மற்றும் குளிர்ச்சியான துருவ பகுதிகளில் உறைந்த நிலையில் தண்ணீர் காணப்படுகிறது. இதுபோல் சந்திரனின் வடதுருவத்தில் பரந்த அளவில் அங்குமிங்கும் பனிகட்டிகள் பரவிக்கிடக்கின்றன.
இந்த பகுதியில் மைனஸ் 156 டிகிரி செல்சியசுக்கு அதிகமான குளிர்ந்த நிலை ஒருபோதும் பதிவாகவில்லை. மேலும், சூரிய வெளிச்சம் ஒருபோதும் சென்றடைந்ததில்லை'' என்று நாசா ஆய்வு இதழில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் 1 என்ற செயற்கைக்கோள் இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்டது.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப பிரச்னை காரணமாக ரேடியோ சிக்னல்களை அனுப்ப முடியாமல் நிறுத்தி கொண்டது. இதையடுத்து கடந்த 2016ல் நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திராயனை மறுபடி அதே இடத்தில் நிறுவியது.
அப்போது சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு ஐஸ் படிமங்கள் இருப்பதாக சந்திரயான் 1 அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டதை இஸ்ரோ வெளியிட்டது.
தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சந்திரயான் 1 தகவலை உறுதிபடுத்தியுள்ளது. ஆக,சந்திரனில் சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்தது ஐஸ் படிமங்கள்தான். ஆகவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment